என் மீது வரும் புகாரை யாரும் விசாரிக்க கூடாது: அதிகாரிகளை மிரட்டிய மதுரை துணை மேயர்!
By : Thangavelu
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. அங்கு தனித் தனி மண்டலங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெறுகிறது.
அதே போன்று திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் சிம்ரன் சித் சின்ஹா, மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதில் பட்டா, சிட்டா அடங்கள் உள்ளிட்ட தங்களின் பிரச்னைகளையும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சிலர் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், 97வது வார்டு மனை முறையறை திட்டத்தில் விண்ணப்பித்த முத்துவேல் என்பவர் மேயர் இந்திராணியிடம் துணை மேயர் நாகராஜன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக துஷ்பிரயோகம் செய்து மனை முறையறையை நிறுத்தி வைத்திருப்பதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு முறை நேரில் சந்தித்து முறையிட்ட போதும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க துணை மேயர் நாகராஜன் தடைப்போட்டுள்ளார். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயர், முத்துவேல் மீது வழக்கு தொடருவேன், என்னிடம் கேட்காமல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தக்கூடாது என்று மிரட்டுகின்ற வகையில் அவரது பேச்சுக்கள் இருந்தது. இதனால் குறை தீர்ப்பு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மக்களுக்கு சேவை செய்வதாக கூறிவிட்டு தற்போது மனு கொடுக்கும் நபர் மீது வழக்கு தொடருவேன் என்று கூறுவது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: Abp