தேர்வு பற்றி மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பும் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு!
By : Thangavelu
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதே சமயம் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு எவ்வித அறிவிப்பும் திமுக அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது, அதில் ஒன்று முதல் 5ம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டது. எனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயமாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகளை மாற்றி, மாற்றி பள்ளிக்கல்வித்துறை வெளியிடுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
Source: News 7 Tamil
Image Courtesy:The New Indian Express