சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றாக உருமாறிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
By : Thangavelu
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றாக உருமாறிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் தொடர்கிறது. இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி இந்தியாவில் 781 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் டெல்லியில் 238 பேருக்கும், மகாராஷ்டிராவில் 167 பேரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் 45 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அசோக் நகரில் ஒரு தெருவில் மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi