மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லையாம்: மதமாற்றும் கும்பலுக்கு ஆதரவாக கருத்துக் கூறும் அன்பில் மகேஷ்?
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றும் கும்பலால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்துக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றும் கும்பலால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்துக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவி தற்கொலை பற்றி சக மாணவர்களுடன் விசாரணை மேற்கொண்டத்தில் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் அவருக்கு மதமாற்றும் கும்பல்கள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு படிக்க அனுப்பிய இடத்தில் மதமாற்றும் கும்பல்களால் தொடர்ந்து தொல்லைகளை மாணவி அனுபவித்து வந்துள்ளார். இது பற்றி கேள்விப்பட்ட தமிழக பாஜகவினர் நேரடியாக களத்தில் இறங்கி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதமாற்றும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், மதம் மாற முடியாது என்று கூறிய மாணவியை விடுதியில் கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் இதர வேலைகளை கொடுத்து மிகப்பெரிய கொடுமைகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது. இது பற்றி பேசிய மாணவியின் வீடியோ மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் கூறவில்லை. இருந்தாலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் அதற்கான விலையைத் தந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இவரது கருத்துக்கு இந்துக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாணவி உயிரிழக்கும் முன்னர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். பள்ளியில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த காரணத்தினாலேயே மாணவி விஷம் குடித்தார் என்று கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் இது போன்று சொல்வதால் மதமாற்றும் கும்பலுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக இருக்கிறது என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Source, Image Courtesy: News 7 Tamil