Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Dec 2021 9:32 AM GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், கேப்டன் வருண்சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ஜெனரல் பிபின் ராவத் நீலகிரியில் உள்ள வெலிங்டனில் பாதுகாப்பு படைக் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ அதிகாரிகளுடன் உரையாடுவதற்காக குன்னூருக்கு சென்றார். இதற்காக அவர் மற்றும் அவரது மனைவி, ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்திய விமானப் படையின் எம்.ஐ. 17 வி5 ரக ஹெலிகாப்டரில் கோவை, சூலூர் விமானபடை தளத்தில் இருந்து நேற்று (டிசம்பர் 8) காலை 11.48 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.

சுமார் நண்பகல் 12.15 மணியளவில் ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டும். அதாவது சூலூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான துண்டிப்பை 12.08 மணியளவில் ஹெலிகாப்டர் இழந்துள்ளது. இதன் பின்னர் குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அவர்கள் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருந்தை பார்த்துள்ளனர். இதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு படையை விரைந்து அப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் விபத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கின்ற பணி வேகமாக நடைபெற்றது. மீட்கப்பட்டவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்து விட்டனர். குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் உயிர் பிழைத்தார். அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் அவரின் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர், கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பி.எஸ்.சவுகான், ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங், வாரண்ட் ஆபிசர் ரானா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் ஆஃபிசர் அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பல் ராய், நாயக் குருஸ்வாக் தேஜா, நாயக் ஜிதேந்திரா குமார், லேன்ஸ் நாயக் விவேக் குமார், லேன்ஸ் நாயக் சாய் தேஜா உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், விமானப்படைத் தளபதி சவுத்ரி நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு இந்திய விமானப்படைக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங், ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீப் உள்ளிட்டோர் தலைமையில் இவை நடைபெறும். உயிரிழந்த முப்படை தலைமை தளபதியின் உடல் நாளை (டிசம்பர் 10) முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: The Economics Times




Next Story
கதிர் தொகுப்பு
Trending News