Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 3ம் அலை எச்சரிக்கை: குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று 3வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று குழந்தைகளை தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 3ம் அலை எச்சரிக்கை: குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 5:06 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று 3வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று குழந்தைகளை தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட பகுதிகளில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் என்று உருவெடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3ம் அலை பரவக்கூடும் என்றும், இது குழந்தைகளை தாக்கும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர். எனவே ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திக்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கைகளும் தயாராக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெரியவர்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தற்போது குழந்தைகளை தாக்கும் என்ற செய்தி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News