Begin typing your search above and press return to search.
கொரோனா 3வது அலையை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!
கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

By : Thangavelu
கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிப்பில், தியேட்டர்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா 3வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை இதில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story
