100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியின் நன்மை குறித்து விளக்கம் !
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக கிராமப்புற பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அது போன்று வேலை செய்யும் பெண்களிடம் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட பாலவாடி ஊராட்சியில் 100 நாள் வேலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
By : Thangavelu

ஆனால் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். அது போன்றவர்களுக்கு இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவர் கோமதி, மற்றும் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் மற்றும் செவிலியர்கள் ஜெயா, பூங்கொடி உள்ளிட்டோர் நேரில் சென்று தடுப்பூசி பயன்கள் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பன பற்றி எடுத்துரைத்தனர்.
மேலும், வேலை பார்க்கும் இடங்களிலேயே கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது. 90க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏரி வேலை செய்யும் இடங்களிலேயே தடுப்பூசி போடப்பட்டது. அது மட்டுமின்றி சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் பெண்களுக்கு கொரோனா தொற்று குறித்து உரையாற்றினார்.
கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தாரை பாதுகாக்க வேண்டும் எனில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடுபவர்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து மிக மிக குறைவு, அப்படி கொரோனா தொற்று வந்தாலும் உயிர் போகின்ற அளவிற்கு எவ்வித பாதிப்பும் வராமல் மீண்டும் உயிர் வாழ முடியும் என்றார். இந்த தடுப்பூசி முகாமில் பாலவாடி ஊராட்சி செயலாளர் ஜம்பேரி உடனிருந்தார்.