கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க அரசு உத்தரவு.!
தமிழகத்திலும் பாதிப்பு தினமும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவும் இடங்களை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் 40 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதே போன்று தமிழகத்திலும் பாதிப்பு தினமும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவும் இடங்களை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும், வார்டு அளவிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்கும் வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.