Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா உயிரிழப்பு ! இறப்பு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு !

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்னர் யார்? யார்? கொரோனா தொற்றால் உயிரிழந்தனர் என்று ஆய்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா உயிரிழப்பு ! இறப்பு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு !
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Sept 2021 2:44 PM IST

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்னர் யார்? யார்? கொரோனா தொற்றால் உயிரிழந்தனர் என்று ஆய்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் தமிழகத்தில் ஏராளமானோர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அது போன்றவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவிகளை அறிவித்திருந்தது. ஆனால் அது போன்ற நிதியுதவிகளை பெறுவதற்கு கொரோனாவால் உயிரிழந்ததற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில், கொரோனா சான்றிதழ்கள் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தார் என்ற சான்றிதழ் வழங்ககோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:The hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News