Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் கொரோனா தேவி சிலை வைத்து பூஜை.!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் கொரோனா தேவி சிலை வைத்து பூஜை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2021 9:27 AM IST

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை, காமாட்சிபுரி பகுதியில் உள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.





இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீரிசிவலிங்கேஸ்வரா, கொரோனா வைரஸ் பொதுமக்களின் அன்றாட வேலையை பெரிதும் புரட்டி போட்டுள்ளது. இதனை உணர்ந்து கொண்டுதான் கொரோனா தேவி சிலையை வடித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் வந்த பிளேக் நோயின் போதும் பிளேக் மாரியம்மன் சிலை உருவாக்கி வழிபட்டதாகவும், கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால் அனைத்தும் சரியாகும் என்றார். மேலும், கொரோனா தேவிக்கு 48 நாட்கள் மகா யாகம் நடத்தப்படும். 48 நாட்கள் கடந்த பின்னர் பொதுமக்கள் கொரோனா தேவியை வழிபடலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News