கொரோனா நோய் தொற்று.. ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.!
கொரோனா நோய் தொற்று.. ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உட்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு அதிகமாக கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டக் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது போன்ற அம்சங்கள் இந்த ஆலோசனையில் இடம் பெறும் என்று தெரிகிறது.