தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி.!
By : Kathir Webdesk
தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போடப்பட்டது. இதனிடையே காவலர்களுக்கு இன்னும் தடுப்பூசி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது. தினமும் 500 அல்லது 600 நபர்களுக்கு மட்டுமே தொற்று ஏற்படுகிறது. முன்னர் தொற்று பரவலை விட தற்போது மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.