Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பரவல் எதிரொலி: மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் இயங்காது.!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் சென்று வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு மேற்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி: மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் இயங்காது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 May 2021 5:19 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் சென்று வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு மேற்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. நீதிமன்றங்களும் வழக்கம் போல செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், கீழமை நீதிமன்றங்கள் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News