கொரோனா தொற்று அதிகரிப்பு: பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய ராமதாஸ்.!
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், யாரும் சரிவர கடைப்பிடிக்கவில்லை.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், யாரும் சரிவர கடைப்பிடிக்கவில்லை.
இந்நிலையில், பெற்றோர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இது பற்றி அவர் விடுத்துள்ள தனது ட்விட்டர் பக்கத்தில்: "முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம். மகிழுந்து, இரு சக்கர ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள். ஊரடங்கின் பொருளை இன்னும் புரிந்து கொள்ளாமல் ஊர் சுற்றி வருவோருக்கான அறிவுரை இது.
வெளியே சுற்றாமல் வீட்டில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாததன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்," என தெரிவித்துள்ளார்.