ஈரோட்டில் கொரோனா மாத்திரை மோசடி: ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதி.!
ஈரோடு மாவட்டம், சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா. மேலும் அவரது தோட்டத்து வேலை செய்யும் குப்பம்மாள். இவர்கள் வழக்கம் போன்று தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மர்ம நபர் கொரோனா தொற்று சிறப்பு முகாமில் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

By : Thangavelu
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சத்து மாத்திரை என்று மோசடியில் ஈடுபட்டவரால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மற்ற 3 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா. மேலும் அவரது தோட்டத்து வேலை செய்யும் குப்பம்மாள். இவர்கள் வழக்கம் போன்று தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மர்ம நபர் கொரோனா தொற்று சிறப்பு முகாமில் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் வராமல் இருக்க, தன்னிடம் சத்து மாத்திரை இருப்பதாக கூறியுள்ளார். அதனை நம்பிய நான்கு பேரும் மாத்திரையை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்த பின்னர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் சத்து மாத்திரை கொடுத்த நபர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்துள்ளார். மேலும், கருப்பண்ணன் கவுண்டர் மற்றும் அவரது மகள் தீபா ஆகிய இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருந்தததை தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட வேலை செய்யும் குப்பம்மாள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார். இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். கொரோனா சத்து மாத்திரை கொடுத்த சம்பவம் ஈரோடு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.