Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நோயாளிகளுக்கு உதவ புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு உதவ புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 12:31 PM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தேவைப்பட்டால் அது பற்றி கோரிக்கை வைப்பதற்காக, தமிழக அரசு சார்பில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கியுள்ளது.





கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வரும் பட்சத்தில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து தங்களது கருத்துக்களை பொதுமக்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.




இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டளை என்ற மையத்தை தொடங்கியுள்ளது. அந்த மையம் மருத்துவனையில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை நோயாளிகளுக்கு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மையம் செயல்படும்.





அந்த வகையில், படுக்கைகளில் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக 104‌‌GoTN ‌‌‌‌‌‌‌என்ற ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரபல படுத்தும் வகையில் #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News