Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா சிறப்பு மையத்தில் யோகா வகுப்புகள்.. விரைவில் குணமடையும் நோயாளிகள்.!

இதன் காரணமாக சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருவதால், சிகிச்சை மையங்கள் காலியாகி வருகிறது.

கொரோனா சிறப்பு மையத்தில் யோகா வகுப்புகள்.. விரைவில் குணமடையும் நோயாளிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 8:42 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு மையத்தில் நோயாளிகளுக்கு யோகா வகுப்புகள் நடத்தப்படுவதால், விரைவாக குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல் வெளியாகி வருகிறது. கன்னியாகுமரியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.





இதன் காரணமாக சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருவதால், சிகிச்சை மையங்கள் காலியாகி வருகிறது. மேலும், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.




இந்நிலையில், அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது 68 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிறப்பு சிகிச்சை மையத்தில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் சுறுசுறுப்புடனும், உற்சாகமுடன் காணப்படுகின்றனர்.

இது போன்று செய்வதால் நோயாளிகள் 5 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இது போன்ற பயிற்சிகள் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News