Kathir News
Begin typing your search above and press return to search.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் ரூ.250 நிர்ணயம்.. தமிழக அரசு.!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் ரூ.250 நிர்ணயம்.. தமிழக அரசு.!

ThangaveluBy : Thangavelu

  |  28 Feb 2021 3:34 AM GMT

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பல மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.




இதனையடுத்து 2வது கட்டமாக நாளை முதல் (மார்ச் 1ம் தேதி) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.




அதில் கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் ரூ.250 மட்டும் வசூலிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கலாம்.

இதில் ரூ.150 தடுப்பு மருந்தின் விலையாகவும், சேவை கட்டணமாக ரூ.100 இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News