இன்று 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.!
நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
By : Thangavelu
நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, கொரோனா இல்லா நாட்டை உருவாக்க சபதம் எடுத்துக்கொள்வோம்.