மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா... மக்களை உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய் தொற்று காரணமாக பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
By : Bharathi Latha
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய் தொற்று காரணமாக பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது நோய் தொற்று அதிகரித்து தான் வருகிறது. மேலும் புதிதாக வைரஸ் காய்ச்சல் பல்வேறு நபர்களை தாக்கும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது.இதன் காரணமாக பல்வேறு பொது மருத்துவமனைகளில் பாதிக்கப்படும் எண்ணிக்கை விதமாக அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று தீவிரத்தை உணர்ந்து மத்திய அரசு தற்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானின் உருமாறிய எக்ஸ்.பி.பி., BA2 வகை தொற்றுதான் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வகையான வைரஸ் வீரியம் குறைந்ததாக இருப்பதன் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுதாது என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் டெங்கு, நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுவதால் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது. அதே போல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக இருக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையிலும் தற்பொழுது நோய் தொற்று அதிகமாக இருப்பதன் காரணமாக முதுமையில் இருக்கும் நபர்கள் அதிக அளவில் வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:Maalaimalar