Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா சிகிச்சை கட்டணம் குறைக்க வேண்டும்.. புதிய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கொரோனா சிகிச்சை கட்டணம் குறைக்க வேண்டும்.. புதிய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 May 2021 7:27 PM IST

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

அப்படி செல்பவர்களிடம் கட்டணம் அதிகளவு வாங்கப்படுகிறது. கொரோனா சமயத்தில் மக்களிடம் போதுமான பணம் இருக்காது என்றும் தெரிந்தும் பல மடங்கு கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் வாங்குவதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை புதிய அரசு நெறிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News