கொரோனா பரவல் அதிகரிப்பால் முழு ஊரடங்கே தீர்வு: மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை.!
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைகள் போதாது என்றும், முழு பொது முடக்கம் தேவை என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறது.
நோயாளிகளுக்கான மருந்துகளும் தற்போது தேவைகள் எழுந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த சில நாட்களாக மரணங்கள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அது மட்டுமின்றி மக்கள் அதிகளவு கூடும் இடங்களான தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைகள் போதாது என்றும், முழு பொது முடக்கம் தேவை என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.