கொரோனாவில் நம்பர் ஒன் மாநிலமாக பெயர் எடுத்த தமிழ்நாடு.. மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி சாதனை.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு அரசு முழுஊரடங்கை அறிவித்த பின்னர்தான் தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு அரசு முழுஊரடங்கை அறிவித்த பின்னர்தான் தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இடுகாட்டில் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கிறது. திமுக அரசு பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சொல்லிக்கொள்ளும்படியான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்படைந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 59 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதே போன்று இரண்டாவது இடத்தை கேரளா பிடித்துள்ளது. அங்கு 31 ஆயிரத்து 337 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 34 ஆயிரத்து 875 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 365 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. கேரளாவில் 32 ஆயிரத்து 762 பேரும், கர்நாடகாவில் 34 ஆயிரத்து 281- பேரும், மகாராஷ்டிராவில் 34,031- பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது இந்தியாவிலேயே தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முன்னோக்கி செல்வது, பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.