சென்னை: குறைந்து வரும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்.!
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா நோய் இருந்து வந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இரண்டாம் அலையின் வீரியம் அதிகமாகவே இருந்தது.
By : Thangavelu

அந்த வகையில் கொரோனா தொற்று கடந்த மாதம் மிக அதிகளவு இருந்தது. அதிலும் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருந்தது. இதனால் கடந்த மாதம் முதல் தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது. இது கடந்த ஒரு வருடத்தில் இல்லாத வகையில் அமைந்தது. அதிலும் உயிரிழப்புகளும் 400க்கும் அதிகமாக இருந்தது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு விழி பிதுங்கி நின்றது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று பாதித்த பகுதிகளை தடுப்புகளை வைத்து பொதுமக்கள் வெளியில் வராதவாறு பார்த்துக்கொண்டனர். அதே போன்று சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7,500-க்கும் அதிகமாக இருந்தது. இதன் பின்னர் கடந்த ஒரு வாரமாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனிடையே தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக 2500க்கும் குறைவானவர்களே தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். அதே போன்று கடந்த மாதம் முழுவதும் 765 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்து வந்தது. இது கடந்த மே 31ம் தேதியுடன் 365 ஆக குறைந்துள்ளது.