வடசென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு.!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 7500க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.
By : Thangavelu

நோய் தொற்று குறைவாக இருந்த பகுதிகளிலும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 6 ஆயிரத்து 73 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 667 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 9ம் தேதியில் இருந்து வடசென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களிலும் 22.8 சதவீதம் அளவுக்கு நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்த 5 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் ஏற்பட்டால், அந்த தெருவை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.