Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் உச்ச கௌரவம் - தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் பதக்கங்களுக்கு தேர்வு!

மத்திய அரசின் உச்ச கௌரவம் - தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் பதக்கங்களுக்கு தேர்வு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Aug 2022 6:13 AM GMT

சுதந்திரதினத்தையொட்டி மொத்தம் 1,082 காவல் பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீரச்செயலுக்கான காவல் பதக்கங்கள் 347 பேருக்கு வழங்கப்படுகின்றன. மிகவும் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம் 87 பேருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 648 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

347 வீரச்செயல் விருதுகளில் பெரும்பாலானவை ஜம்மு & காஷ்மீரில் துணிச்சலான செயல்களுக்காக 204 பணியாளர்களுக்கும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணிச்சலான செயல்பாட்டிற்காக 80 பணியாளர்களுக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் துணிச்சலான செயல்களுக்காக 14 பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

தீரச்செயல் விருதுகளைப் பெற்றவர்களில், 109 பேர் சிஆர்பிஎஃப், 108 பேர் ஜே & கே காவல்துறை, 19 பேர் பிஎஸ்எஃப், 42 பேர் மகாராஷ்டிரா, 15 பேர் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

மிகவும் சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவரின் பதக்கங்களை தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் பெறுகின்றனர். சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களுக்கு தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட மொத்தம் 45 பேருக்கு சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தின் உதவி சிறைகாவலர் திரு டி. ஜவஹர் மற்றும் கிரேட் 1 வார்டர் திரு ஆர். சங்கரராமேஸ்வரன் ஆகியோர் தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப் பதக்கம் பெற உள்ளனர்.

Input From: Timesnownews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News