Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் கோயில் சொத்துக்களில் ஊழல்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

கோயில் சொத்துக்களில் அனுமதியில்லாமல் குத்தகைதாரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழுமையான நம்பிக்கையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் கோயில் சொத்துக்களில் ஊழல்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 3:22 AM GMT

கோயில் சொத்துக்களில் அனுமதியில்லாமல் குத்தகைதாரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழுமையான நம்பிக்கையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோயில் சொத்தில் ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக இருக்கிறார். வாடகை பாக்கிக் தொகையாக ரூ.1.44 லட்சம் செலுத்தும்படி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவினை வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று அவர் பிறப்பித்த உத்தரவில், வாடகை நிலுவை தொகை செலுத்தாமல் அவர் கோயில் சொத்தில் தொடர்ந்து இருக்கிறார். கடந்த 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.


எனவே கடந்த 5 ஆண்டுகள் முடிந்து விட்டாலே குத்தகை காலம் காலாவதியாகி விடும். 5 ஆண்டுகளை கடந்தும் குத்தகையை அனுமதித்தற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அனுமதியின்றி இருப்பதாகவே கருத முடியும். ஒரு இடத்தில் அனுமதியின்றி ஒருவர் தங்குகிறார் என்பது நிரூபணம் செய்யப்பட்டால், வாடகை பாக்கியை செலுத்துவதன் வாயிலாக அவருக்கு குத்தகை உரிமை வந்துவிடாது. மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனை இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. எனவே கோயில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிப்பது அவசியம். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


கோயில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர்கள் இருக்கின்றனர். எவ்வித அனுமதியும் வாங்காமல் குத்தகைதாரர்கள் வசம் கோயில் சொத்துக்கள் இருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் எடுக்கின்ற நடவடிக்கையில் முழுமையான திருப்தி இல்லை. தனி ஆட்களுடன் அதிகாரிகளும் சிலர் சேர்ந்து செயல்படுகின்றனர். தற்போது கோயில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளுடைய தூண்டுதலின் பேரில் ஊழல் நடைபெறுகிறது. இது போன்ற செயல்களில் உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேணடும்.

கோயில் சொத்துக்கள், பக்தர்களின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் என்கின்ற எதிர்பார்ப்பில் பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். அவர்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எனில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் பாவம் செய்ததாகவே கருதப்படுவார்கள். கோயில் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதையும், உரிமைகள் மீறப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்காது. இந்த வழக்கினை பொறுத்தவரையில் மனுதாரர் குத்தகைதாரர் இல்லை. எனவே அவர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு இதில் உரிமை இருக்கிறது என்பதனை நிரூபிக்கும் பட்சத்தில் அவர் அதற்கான ஆவணங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அளிக்கலாம். இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Tourismtn


Next Story
கதிர் தொகுப்பு
Trending News