கள்ளத்துப்பாக்கி விவகாரம் - சேலத்தில் 3 இடங்களில் சல்லடை போட்டு தேடிய என்.ஐ.ஏ - தமிழகம் முழுவதும் எச்சரிக்கை
யூ ட்யூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறி வாலிபர்கள் வீட்டில் தேசிய புலனாய் முகமை அதிரடி ரைடு செய்துள்ளது.

By : Mohan Raj
யூ ட்யூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறி வாலிபர்கள் வீட்டில் தேசிய புலனாய் முகமை அதிரடி ரைடு செய்துள்ளது.
சேலத்தில் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் கடந்த இருபதாம் தேதி வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்ற அந்த இருவரையும் போலீசார் கைது செய்து துப்பாக்கி தயாரிக்க அவருக்கு கற்றுக்கொடுத்தவரையும் கைது செய்து சிறையில் அடைத்தர். இதன் பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்கி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து சோதனை நடத்திய அதிகாரிகள் சேலம், சன்னியாசிக்குண்டு, எருமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
