வேளாண் மசோதா தொடர்பாக விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., வேண்டுகோள்.!
வேளாண் மசோதா தொடர்பாக விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., வேண்டுகோள்.!

வேளாண் மசோதாவுக்கு எதிராக வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தூண்டிவிடுகிறது. மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்தும் விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அதே போன்று தமிழகத்தில் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிடுகிறது. வேளாண்சட்டங்களால் ஆபத்து ஏற்படும் என போலியான பிம்பத்தை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், வேளாண் மசோதா சம்பந்தமாக சட்டத்தின் படி தீர்வு காணும்படி கள்ளக்குறிச்சி எஸ்.பி.ஜியாவுல் ஹக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக சிறப்பு காவல் துறை இயக்குனர் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: சமீபகாலமாக வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
வேளாண் மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளது இது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் செய்யாமல் சட்டத்தின்படி தீர்வுகாண கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இதற்கு போராட்டம் தீர்வாகாது என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இனிமேல் ஆவது விவசாயிகள் எதிர்க்கட்சிகளுக்கு பலிகடா ஆகாமல் இருப்பது மிகவும் நன்று.