Kathir News
Begin typing your search above and press return to search.

பழனி கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

பழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்ட இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத்தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

பழனி கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2023 12:15 AM GMT

பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தக்கல் செய்த மனுவில்; திண்டுகல் மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற பழனி முருகன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947-ம் ஆண்டு இயற்றபட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும், கோயிலுக்குள் நுழைவது தடுக்கபடுகிறது. இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்போது நிறைவேற்றபட்டது.


தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறான சூழலில் பழனி தேவஸ்தானத்தில், பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத நபர்கள் திருகோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கபட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.


இந்த நிலையில் இந்து அல்லாத சிலர் பழனி முருகன் கோயிலுக்குல் செல்ல முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகையானது நீக்கபட்டுள்ளது. பழனி முருகன் தேவஸ்தனத்திற்குட்பட்ட முருகன் கோயில் மற்றும் அதற்குன்டான உபகோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கபட்டிருந்தது.


இந்த மனு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் ஆஜராகி, இந்து அறநிலையத்துறை சட்டம் 1947- விதி படி இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலிக்குள் நுழையவதற்கு தடை விதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. எனவே பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதித்து, இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வாதிட்டார்.


இதனை பதிவு செய்த நீதிபதி இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத்தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். தெடர்ந்து இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத்தடை என்ற அறிவிப்பு பதாகையை மீண்டும் அதே இடத்தில் அதிகாரிகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இரண்டு வாரகாலங்களுக்கு ஒத்திவைத்தார்


SOURCE :DINAKARAN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News