Begin typing your search above and press return to search.
தென்மேற்கு பருவழை எதிரொலி.. கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.!
தென்மேற்கு பருவமழை அதிகரித்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

By : Thangavelu
தென்மேற்கு பருவமழை அதிகரித்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவழை தற்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்தது, இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் நொய்யலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story