Kathir News
Begin typing your search above and press return to search.

தவறான நம்பிக்கை உடைந்தது - நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்கள் பட்டியலில் கோவை முதலிடம்!

Crime Against Women Lowest In Coimbatore, Chennai: NCRB Data 2020

தவறான நம்பிக்கை உடைந்தது - நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்கள் பட்டியலில் கோவை முதலிடம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  17 Sep 2021 4:28 AM GMT

ஒரு சில ஆட்கள் செய்த குற்றத்துக்காக, பொள்ளாச்சி சம்பவத்தோடு தொடர்புபடுத்தி, கோவை என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்பது போல சித்தரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நாட்டிலுள்ள பெருநகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவானதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் உறுதி செய்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1986 இல் உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். NCRB இன் பொறுப்பு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்ட குற்றத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதாகும். NCRB தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ளது.

இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். நாட்டில் உள்ள 19 பெரிய நகரங்களில், தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன. கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு பதிவான குற்றங்களின் விகிதத்தை வைத்து சில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை மாநகரை பொருத்தவரை, சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 9 பேருக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையில், சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 2019ல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 44 ஆயிரத்து, 783 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020ல், 35 ஆயிரத்து, 331 ஆக குறைந்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News