யூடியூபர் மதன் மீது 159 புகார்கள்.. சேலம் விரைந்த தனிப்படை போலீசார்.!
இதனிடையே மதன் சேலம் பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதனால் சென்னை தனிப்படை போலீசார் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By : Thangavelu
பப்ஜி விளையாட்டை பயன்படுத்திய மதன் அதற்கு என்று யூடியூப் சேனலை ஆரம்பித்து நேரலையில் சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்ததாக தமிழகம் முழுவதும் 159 புகார்கள் குவிந்துள்ளது.
பப்ஜி விளையாட்டு மூலம் தனியாக சாட்டிங் செய்து சிறுமிகள் மற்றும் பெண்களிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்துள்ளார் யூடியூபர் மதன். இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வரத்தொடங்கியதால் சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே மதன் சேலம் பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதனால் சென்னை தனிப்படை போலீசார் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் மீது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 159 புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக வந்துள்ளது. இதனால் போலீசார் அனைத்து புகார்களையும் விசாரணைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.