Kathir News
Begin typing your search above and press return to search.

1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் அத்துமீறல்காரர்களிடம்... கிரிமினல் வழக்கில் உள்ளே தள்ள வழி இருந்தும் அரங்கேறும் கூத்து!

According to an official release, the department retrieved assets worth Rs 1,600 crore from encroachers since May this year.

1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில்  சொத்துக்கள் அத்துமீறல்காரர்களிடம்... கிரிமினல் வழக்கில் உள்ளே தள்ள வழி இருந்தும் அரங்கேறும் கூத்து!
X

MuruganandhamBy : Muruganandham

  |  27 Dec 2021 1:49 AM GMT

கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி போலீசில் புகார் அளிக்குமாறு, கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுவரை, துறை கமிஷனர் மூலம் மட்டுமே, ஆக்கிரமிப்பு புகார்கள் அளிக்கப்பட்டன. இப்போது, ​​செயல் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர்களும், இதுபோன்ற புகார்களை அளிக்கலாம். அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இந்த ஆண்டு மே மாதம் முதல் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அத்துமீறல்காரர்களிடமிருந்து துறை மீட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க இந்து சமய அறநிலையத்துறையே, கோவில் நிலத்தை சன்னதி பயன்பாட்டை தவிர்த்து மற்ற காரணங்களுக்கும் பயன்படுத்தி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை மானியக் கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் சித்தலாந்தூரில் உள்ள ஆதனூரம்மன் கோயிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கரை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தமிழரசி தெய்வசிகாமணி என்ற பக்தர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிலத்தை பிரித்து வழங்க கோவில் நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அதை சன்னதி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். நீதிமன்றமும் அதனை அமோதித்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News