கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்.. தமிழகத்தில் ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு.!
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்.. தமிழகத்தில் ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு.!
By : Kathir Webdesk
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஜனவரி தொடக்கத்தில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல மாவட்டங்களில் விவசாயம் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி பெருத்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தனர்.
இதனால் விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கெனவே மாநில அரசு முதற்கட்ட நிவாரணத்தொகையை வழங்கியது.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் இன்று தமிழகம் வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் அருகே சீத்தப்பட்டியில் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவான ரணஞ்சே சிங், ஷூபம் கார்க், பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 2 குழுக்களாக பிரிந்து மழை பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.