மயிலாடுதுறை: சமரசத்துக்கு வரசொல்லி நண்பரின் காதை கடித்து துப்பிய கொடூரம்.!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள பாண்டூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் 42, இவரது நண்பர் ஞானஸ்கந்தன் 40, ஆகிய இருவரும் டைல்ஸ் வேலைக்கு சென்று வருகின்றனர். அதே போன்று கடந்த 30ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு ஊர் திரும்பும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

By : Thangavelu

இந்நிலையில், கடந்த 1ம் தேதி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இரண்டு பேருக்கும் சமரசம் பேசுவதற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையில் பேசிக்கொண்டிருந்த போது சந்துரு திடீரென சிவகுமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பியுள்ளார்.
இதனை பார்த்த சிவக்குமாரின் உறவினர் கார்த்திகேயன் தடுத்தபோது சந்துரு கட்டையால் கார்த்திகேயனை தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டுள்ளனர்.
இதனிடையே சிவகுமாருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்துள்ளனர். சமரசம் பேச வரவழைத்து காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.