கடலூர் அருகே மாதக் கணக்கில் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.!
ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடை செய்து இங்கு கொண்டு வந்தாள் கொள்முதல் செய்யப்படாமல், மாதக்கணக்கில் உள்ளது.
By : Thangavelu
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள சிறுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில், எஸ்.புதூர், குடிக்காடு, மாங்குளம், அரசன்குடி, உள்ளிட்ட சுற்று வட்டார கிராம விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை இங்கு விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது அங்கு நெல் மூட்டைகள் போடப்பட்டு மாதக் கணக்கில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வண்டு, பூச்சிகள் நெல் மூட்டைகளையும் வீணாக்கி வருகிறது.
இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடை செய்து இங்கு கொண்டு வந்தாள் கொள்முதல் செய்யப்படாமல், மாதக்கணக்கில் உள்ளது.
மேலும், மழை பெய்தால் நிலைமை மிக மோசமாகி விடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.