திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
By : Thangavelu
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவடைதை முன்னிட்டு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உற்சவ விழா 10 நாட்களாக நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நிறைவு விழாவை முன்னிட்டு பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து மன்மத தகனம் அருணகிரிநாதர் கோயிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மன்மத உருவபொம்மை செய்து வைக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் எழுந்தருளி மன்மதன் மீது பாணம் கொடுக்கும் நிகழ்ச்சியில் மன்மத உருவபொம்மை எரிக்கப்பட்டது.
Source, Image Courtesy: Malaimalar