சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. போலீசார் தீவிர சோதனை.!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று மே 2ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து கண்காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை கடற்கரை சாலையில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் நடமாடுபவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
அத்தியாவசிய கடைகள் மட்டும் இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கியிருக்கும் என அரசு அனுமதி அளித்துள்ளது. முழு ஊரடங்கில் ஆட்டோ, பேருந்து, கார் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.