முடியும் ஊரடங்கு தளர்வுகள்! மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
முடியும் ஊரடங்கு தளர்வுகள்! மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால், பல்வேறு வகையிலான தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி வந்தநிலையில், வருகின்ற ஜனவரி 31ம் தேதியுடன் ஊரடங்கு தமிழகத்தில் முடிவடைகிறது.
இதனை நீட்டிப்பது மற்றும் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோனை நடத்தினார்.
அப்போது, கொரோனா தொற்றை மேலும் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆலோசனையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது, நீச்சல் குளங்களை திறப்பது உள்ளிட்டவைகளும் இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.