கரண்ட்யை கூட விட்டு வைக்காமல் திருடிய தி.மு.க நிர்வாகி: தலைமை எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே!
மின்சாரத்தைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் திருட்டு வேலை செய்த தி.மு.க நிர்வாகி.
By : Bharathi Latha
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி தி.மு.க செயலாளர் இருப்பவர் ஜோதி குமார் என்பவர். இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சியின் துணைத் தலைவராக அங்க வகித்து வருகிறார். இவரது வீட்டிற்க்காக மெயின் ரோட்டில் இருந்து செல்லும் கம்பி வையர்கள் மூலமாக மின்சாரத்தை திருடி தன்னுடைய சொந்த வீட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்.தன்னுடைய வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கி போட்டு எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
இது குறித்து அடையாளம் தெரியாத மூன்றாம் நபர் ஒருவர் மின்சார வாரியம் அலுவலகத்திற்கு புகார் அனுப்ப தற்பொழுது அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்போது ஜோதி குமார் கடந்த சில மாதங்களாகவே மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரத்தை திருடியது கண்டறியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அது உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து அதிகாரிகள் தகவல் கேட்டதற்கு தன்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் செல்வம் என்பவர்தான் மின் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
ஆனால் இதை அதிகாரிகள் நம்பவில்லை, ஏனெனில் வீட்டு உரிமையாளர்கள் உத்தரவு இல்லாமல் எப்பொழுதும் இது போன்று நடக்காது என்று அவர்கள் எச்சரித்தும் இருக்கிறார்கள். பின்னர் எவ்வளவு மின்சாரம் திருடப்பட்டதற்கு கணக்கெடுத்த அதிகாரிகள், 53 ஆயிரம் ரூபாயை அவருக்கு அபராதமாக விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கும். அதிகார பதவியில் இருக்கும் நபர்களை இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடலாமா? என்று பொதுமக்கள் முகம் சுழிக்கும் செயலாகவே இது அமைந்தது.
Input & Image courtesy: Mediyaan News