சுங்கத்துறை அதிகாரிகளை ஏமாற்றி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை கடத்த முயன்ற கும்பல் ! சுங்க துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினர் !
By : Dhivakar
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 130 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை, சுங்கத்துறையை ஏமாற்றி கடத்த திட்டமிடப்பட்ட கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிலை கடத்தல் யவருக்கும் தெரியாமல் தலை விரித்து ஆடிவந்தது . ஆனால் சமீப காலமாக தான் சிலை கடத்தல் பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகத்திலுள்ள தொன்மையான சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்று பல கோடிகளை கடத்தல்காரர்கள் சம்பாதித்து வருகின்றனர்
காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு உலோக சிலையை அனுப்புவதற்காக, சென்னை விமான நிலையத்தில், சுங்கத் துறையிடம் அனுமதி கேட்டு, விண்ணப்பமும் சிலைக்கான மாதிரியும் அனுப்பி வைத்திருந்தனர். தீவிர சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு சென்று ஆய்வு செய்தனர் .
சோதனையின் போது தான் அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்தது, அந்த சிலை புதிதாக தயாரிக்கப்பட்டது அல்ல, அது தொன்மையான சிலை என்று தெரிய வந்தது. அந்த சிலை 5.25 அடி உயரத்தில், 130 கிலோ எடை கொண்டதாகும். அதன் பழமை தெரியாததால் சுங்கத்துறை அதிகாரிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அந்த உலோக சிலை 500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்தது.
அந்த கும்பலை சுங்க துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.