Kathir News
Begin typing your search above and press return to search.

சைபர் கிரைம் போலீசாருக்கு தண்ணீர்காட்டும் 'பப்ஜி மதன்'.!.

மதன் மற்றும் டாக்சிக் மதன் என்னும் யூடியூப் சேனல்களை நடத்தி வரும் மதன், பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுத்து வந்ததால் அவர் மேலும் பிரபலமானார். அவர் பப்ஜி விளையாடும்போது லைவ் வீடியோவில் போது இவர் ஆபாசமாக பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலீசாருக்கு தண்ணீர்காட்டும் பப்ஜி மதன்.!.
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 4:07 PM IST

மதன் மற்றும் டாக்சிக் மதன் என்னும் யூடியூப் சேனல்களை நடத்தி வரும் மதன், பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுத்து வந்ததால் அவர் மேலும் பிரபலமானார். அவர் பப்ஜி விளையாடும்போது லைவ் வீடியோவில் போது இவர் ஆபாசமாக பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

மதன் மீது சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் மதனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டனர். ஆனால் போலீசார் முன்பு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக உள்ளார்.





மேலும், போலீசார் தன்னை கண்டுப்பிடிக்கும் முடியாதவாறு ஐபி முகவரியை பயன்படுத்தி வருவதால் அவர் எங்கு தலைமறைவாக உள்ளார் என்று போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கம் போன்று விளையாட்டில் பங்கேற்று வரும் மதன், போலீசார் தன்னை கைது செய்ய முடியாது எனவும், தன்னுடன் விளையாடி வரும் திமுக எம்.எல்.ஏ., கதிரவனின் மகனின் உதவி தற்போது எனக்கு தேவையில்லை எனவும், இதனை தானே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சைபர் கிரைம் போலீசார் மதனை பிடிப்பதற்காக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பை முடக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News