Kathir News
Begin typing your search above and press return to search.

மேகதாது அணை விவகாரம்.. மத்திய அமைச்சரிடம் முறையிட டெல்லி செல்லும் துரைமுருகன்.!

கர்நாடக அரசு மேகதாதுவில் புதியதாக அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு செல்கிறார்.

மேகதாது அணை விவகாரம்.. மத்திய அமைச்சரிடம் முறையிட டெல்லி செல்லும் துரைமுருகன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2021 10:06 AM IST

கர்நாடக அரசு மேகதாதுவில் புதியதாக அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு செல்கிறார்.

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து, அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கர்நாடக அரசு தென்பெண்ணை நதியின் குறுக்கே அணை கட்டியுள்ளதையும் எடுத்துரைக்கவுள்ளார்.

இதனிடையே காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News