சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி!
By : Thangavelu
சென்னையில் சொத்துவரியை வசூல் செய்வதற்காக மாநகராட்சி பல்வேறு வகையிலான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து சீரமைக்கப்பட்ட சொத்துவரி பற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் சொத்து உரிமைதாரர்களாக உள்ளனர்.
இதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி பலமடங்கு உயர்த்தப்பட்டதால் மக்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகினர். இது பற்றிய ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. அதில் 4 ஆயிரம் பேர் மாநகராட்சிக்கு கடிதம் வாயிலாக கருத்து தெரிவித்தனர். இருந்தபோதிலும சொத்துவரியை குறைக்க முடியாது என்று மாநகராட்சி அதிரடியாக கூறியது.
இந்நிலையில், சொத்துவரியை நிலுவையில் வைத்திக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அதிரடியான நடவடிக்கையை எடுப்பதற்காக சொத்துவரியை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு சென்னை மாநராட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய புதிய முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar