Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பு துறையில் இனி யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வராது! தமிழகத்தை குறி வைத்து மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் !

The Centre's decision to reduce imports and promote self-reliance (atma nirbharta) in procuring equipment for armed forces may add ammo to Tamil Nadu's bourgeoning defence industry.

பாதுகாப்பு துறையில் இனி யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வராது! தமிழகத்தை குறி வைத்து மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Feb 2022 6:01 PM GMT

ஆயுதப் படைகளுக்கான கருவிகளை வாங்குவதில், இறக்குமதியைக் குறைத்து, ஆத்ம நிர்பர்தா முன்னெடுப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முடிவு, தமிழகத்தின் உந்துதலை கொடுத்துள்ளது. செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22ல் 58 சதவீதமாக இருந்த மூலதன கொள்முதலில், 2022-23ல் 68 சதவிகிதம் உள்நாட்டுத் தொழிலுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இராணுவத்திற்கான கருவிகளை உற்பத்தி செய்ய தனியார் தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாதுகாப்புக் கொள்முதல் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இந்தியாவின் கனவுக்கு தமிழகம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை, திருச்சி மற்றும் ஓசூரில் உள்ள பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஆர்டிஓவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பாதுகாப்பு வழித்தடமும் அமையவுள்ளது.

இந்திய தொழில்துறையானது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, டிஆர்டிஓவுடன் கைகோர்த்து, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள், வேலைகள் மூலம் தன்னிறைவை மேம்படுத்துவதற்கு மேலும் ஒரு அடி எடுத்து வைப்பதற்கும் இது சரியான நேரம் என பாதுகாப்புத்துறை செயலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில், எல்&டி மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே டிஆர்டிஓ பிரிவின் உற்பத்தி பங்களிப்பாளர்களாக உள்ளன. அவை பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வடிவமைத்து மேம்படுத்துகின்றன.

சென்னையை தலைமையிடமாக கொண்ட கனரக வாகன தொழிற்சாலை, இந்திய ராணுவத்திற்கான 118 முக்கிய போர் டாங்கிகளுக்கான 7,523 கோடி மதிப்பிலான சப்ளை ஆர்டரைப் பெற்றுள்ளது. மேலும் தனியார் தொழிற்சாலைகள் உதிரிபாகங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகம் 120 க்கும் மேற்பட்ட விண்வெளி உற்பத்தி நிறுவனங்களையும் பல்வேறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு 700 சப்ளையர்களையும் கொண்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News