பாரத தேசத்தின் பாதுகாவலரே.. பாமரர்களின் சேவகரே.. வருக வருக.. பிரதமரை வரவேற்ற துணை முதலமைச்சர்.!
பாரத தேசத்தின் பாதுகாவலரே.. பாமரர்களின் சேவகரே.. வருக வருக.. பிரதமரை வரவேற்ற துணை முதலமைச்சர்.!
By : Kathir Webdesk
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று சென்னை வருகை புரிந்தார். அப்போது அவர் மெட்ரோ ரயில் மற்றும் ஐஐடிக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும், சுயசார்பு திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு அர்பணித்தார்.
இதனிடையே தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். இதன் பின்னர் துணை முதலமைச்சர் வரவேற்று பேசும்போது, பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பிரதமர் மோடி ஜியை வருக வருக என வரவேற்கிறேன். தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் வருகையால் தமிழகம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. சிறந்த முதலீட்டுக்கான தளமாக தமிழகம் மாறியுள்ளது. பல்வேறு மத்திய அரசு விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.