Kathir News
Begin typing your search above and press return to search.

தூர்வாரும் பணிகள் சரியாக செய்யாமல் தூங்கிய அதிகாரிகள் : டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் !

தூர்வாரும் பணிகள் சரியாக செய்யாமல்  தூங்கிய அதிகாரிகள் : டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் !
X

DhivakarBy : Dhivakar

  |  12 Nov 2021 4:34 AM GMT

வயல்வெளிகள் எது ? நீர் நிலைகள் எது ? என்று தெரியாமல், மழை வெள்ளம் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.

திமுக கோட்டை என்று சொல்லப்படும் சென்னை, மழையால் தத்தளித்து வருகிறது. அதே போல் திமுக கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா பகுதிகளில் மழை வெள்ளத்தால் பயிர்கள் நாசம் அடைந்து பரிதாபகரமான நிலையில் தத்தளித்து வருகிறது .

அதிகாரிகளின் அலட்சியத்தால் விழைந்த பாதிப்பு :

சுமார் 800 ஏக்கர் அளவில் நெல், வாழைமரங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல், அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், வாழைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைக்காலங்களில் விவசாயிகளில் இந்த இன்னலைகள் தொடர்கதையாகிவருகிறது வேதனை அளிப்பதாக அமைகிறது.

தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெற்றதாக கூறும் தி.மு.க அரசை விமர்சிக்கும் டெல்டா விவசாயிகள் :

"வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. பல இடங்களில் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் வெள்ளநீர் அனைத்து வயல்களிலும் புகுந்துவிட்டது. வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும். பல கிராமங்களில் வடிகால் வாய்க்கால்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன.

அவற்றையும் தூர்வார வேண்டும் என்று ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் கொஞ்சம்கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்களது இழப்புக்குக் காரணம் அதிகாரிகளே. அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருந்தால், நாங்கள் இந்த இழப்பைச் சந்திருக்க மாட்டோம்."

ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பார்கள். தமிழகத்தில் மட்டும் தான் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதது மழை காலங்களில் டெல்டா விவசாயிகள் படும்பாடு.

Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News