Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் ஒருவருக்கு 'டெல்டா ப்ளஸ்' கொரோனா வைரஸ்: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை.!

தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ்: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Jun 2021 5:33 PM IST

சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவலை தெரிவித்துள்ளார்.





இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் சற்று ஓய்ந்து வரும்நிலையில், மீண்டும் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.





இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க முடியாமல் திணறி வரும் மருத்துவர்களுக்கு, டெல்டா ப்ளஸ் மேலும் கூடுதல் சிரமத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News